டிஎன்பிஎஸ்சி (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு!

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

DIN

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 28.3.2024 அன்று குரூப் 1 தோ்வுத் தேதி அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, முதல்நிலைத் தோ்வானது கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது.

துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப் 1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட்டது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். குரூப் 1 முதன்மைத் தேர்வு டிச. 10 முதல் டிச. 13 வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT