அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு. 
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

விருதுநகரில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் ஓட்டுநர் கொலை விவகாரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த பெண் டிஎஸ்பி தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தடுக்க முயன்ற காவலர்களையும் போராட்டக்காரர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறிந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துறை தலைவர் கண்ணன் சம்பவம் குறித்து டிஎஸ்பி மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, டிஎஸ்பியை தாக்கியது தொடர்பாக, நெல்லிக்குளம் பாலமுருகன், அம்மன்பட்டி காளிமுத்து, பெருமாள்தேவன்பட்டி ஜெயராம்குமார், சஞ்சய்குமார், பாலாஜி, பொன்முருகன், முத்துபட்டி சூர்யா ஆகிய 7 பேரையும் அருப்புக்கோட்டை நகர போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், டிஎஸ்பியை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT