கோவளம் அருகே செம்மஞ்சேரியில் புதன்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 
தற்போதைய செய்திகள்

சென்னை கோவளம் அருகே மினி லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே செம்மஞ்சேரியில் புதன்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

DIN

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே செம்மஞ்சேரியில் புதன்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் சாலையோரத்தில் பழுதான மினி லாரி நின்றுகொண்டிருந்தது.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் மினி லாரிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டதால் காரில் இருப்போரை மீட்க முடியவில்லை. காரின் இருப்போரிந் உடல்களை மீட்கும் பணியில் கேளம்பாக்கம் போலீசார் மற்றும் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் பலியானவர்களின் விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT