ஆசிரியர் நாள் படம்: எக்ஸ்
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் நாள்: பிரதமர், முதல்வர் வாழ்த்து!

ஆசிரியர் நாளையொட்டி பிரதமர், முதல்வர் வாழ்த்து.

DIN

ஆசிரியர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஆசிரியர் நாள் வாழ்த்துகள். இளைய தலைமுறையினரை செதுக்கும் ஆசியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!

அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!

உத்தர பிரதேசம்: பணிக்கு வராத 17 அரசு மருத்துவா்கள் பணிநீக்கம்

SCROLL FOR NEXT