ஜபல்பூர்: இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் "இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் (22191) இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6 ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது" என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும் ரயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு, சேதங்கள் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.