முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் ராகுல் காந்தி.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 7:17 AM
ராகுல் காந்தி
பகிர்:

அமெரிக்கா வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் டல்லாஸில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாள் பயணமாக(செப். 8-11) அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் இந்திய அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றப் பின் செல்லும் முதல் அமெரிக்கா பயணம் இதுவாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →