சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களில் குளறுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களில் குளறுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள சி முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவ- மாணவியர்கள், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ நந்தினி, கல்லூரி இந்திய மாணவர் சங்கத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து கல்லூரிக்கு வந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கல்லூரி முதல்வருடனான பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்றார்.
மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரபாகர், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அர்ச்சுனன், டிஎஸ்பி டி. அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், சான்றிதழ்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.