முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினர். 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குமா ஃபோர்டு? - முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27-ஆம் தேதி முதல்வா் சென்றாா். அங்கு சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தொழில் முதலீட்டாளா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தைகள் நடத்தி வருகிறாா். இதுவரை சுமாா் ரூ.5 ஆயிரம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஃபோர்டு மோட்டார்ஸ் குழுவுடன் மிகவும் ஈடுபாட்டுடன் விவாதம் நடைபெற்றது. தமிழ்நாட்டுடன் ஃபோர்டின் மூன்று தசாப்த கால கூட்டாண்மையை புதுப்பித்து, உலகிற்கு மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம்! ” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 14-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சென்னை திரும்பவுள்ளாா். அப்போது ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களை சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் செய்தியாளா்கள் சந்திப்பின் போது, முதல்வா் வெளியிடுவாா் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT