விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  
தற்போதைய செய்திகள்

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக, தவெக பங்கேற்கலாமா? - திருமாவளவன் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கலாம்

DIN

விழுப்புரம்: அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கலாம் என அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் “அதிமுக” பங்கேற்கலாம் என திருமாவளவன் திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.

விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, “விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுகவும் இந்த மாநாட்டிற்கு வரலாம், அதிமுக மட்டுமல்ல. மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும் எந்த கட்சியாக இருந்தாலும் இந்த போராட்டத்துக்கு வரலாம் என கூறினார். மேலும் மதுவை ஒழிக்க மட்டுமே அறைகூவல் விடுக்கிறேன். இது 2026 பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி அல்ல என்றார்.

மதுக்கடைகளை மூடுவதில் என்ன சிக்கல்?

மதுவிலக்கு மாநாட்டை கூட்டணிக் கணக்குடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து உள்ளதால் மதுக்கடைகளை மூடுவதில் என சிக்கல் இருக்கிறது?

பிகார், குஜராத்தில் மதுவிலக்கு இருக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் இருக்கக் கூடாது? மதுவிலக்கில் உடன்பாடு இருப்பதால்தான் அதனை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது திமுக. எனவே மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்.

எந்த சக்திகளோடும் இணைய தயாராக இருக்கிறோம்

மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல. சாராயம் என்றாலே அது கேடுதான். மக்கள் பிரச்னைகளுக்காக சாதிய சக்திகளை தவிர எந்த சக்திகளோடும் இணைய தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும்

மதுக்கடைகளின் வருமானத்தைக் கொண்டு ஆட்சி நடத்துவது ஏற்புடையதல்ல. ஹிந்தி, நீட் எதிர்ப்பில் தமிழகம் முதன்மையாக இருக்கும்போது மது ஒழிப்பிலும் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முதன்மையாக இருக்க வேண்டும்.

மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

விஜய் பங்கேற்கலாம்

மது ஒழிப்பு மாநாட்டிற்கு விஜயை அழைப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,விஜய்க்கும் மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும். அவரும் கட்டாயம் விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம் என்றார் திருமாவளவன்.

ஆளும் திமுக கூட்டணியில் பங்கேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்களது மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT