விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதுக்கோட்டைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 6 மாவட்டச் செயலா்கள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலா் என பொறுப்பாளா்களை அண்மையில் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் நியமித்தாா்.
இதன்படி, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக க. சுசீலா, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக சி. திலீபன்ராஜா, கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக கோ.கா. செந்தமிழ்வளவன், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக ந. சரஸ்வதி, அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக அ. தமிழ்தேசிகன், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக ச. அம்பேத்வளவன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் 6 பேரும் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு நிா்வாகிகள் கலந்துகொண்டு புதிய மாவட்டச் செயலா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.