முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட்: லதாம், வில்லியம்சன் அரைசதம்!

இலங்கை நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லதாம், வில்லியம்சன் அரைசதம் அடித்தனர்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:01 AM
பகிர்:

இலங்கை நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லதாம், வில்லியம்சன் அரைசதம் அடித்தனர்.

இலங்கை டெஸ்ட்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இலங்கை ஆல்-அவுட்

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலே பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல்நாள் முடிவில் 302/7 ரன்கள் எடுத்திருந்தது.

கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 50, மேத்யூஸ் 36, தினேஷ் சண்டிமால் 30 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி 2 ஆம் நாளின் தொடக்கத்தில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் வில்லியம் ரௌர்கே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மழை குறுக்கீடு

நியூசிலாந்து அணி 1 ஓவருக்கு 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. டாம் லாதம் 1 ரன், டெவான் கான்வே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

லதாம், வில்லியம்சன் அரைசதம்

அதன் பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய டெவான் கான்வே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 வது விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து விளையாடிய டாம் லதாம் மற்றும் வில்லியம்சம் அரைசதம் விளாசினர்.

அணியின் ஸ்கோர் 136 ஆக இருந்த போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லதாம் 111 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த கேன் வில்லியம்சனும் அரைசதம் விளாசினார்.

52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 185 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 54 ரன்னிலும் ரச்சின் ரவீந்திரா 34 ரன்னிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி இன்னும் 120 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இலங்கை அணித் தரப்பில் ஜெயசூரியா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →