குசல் மெண்டிஸ் அரைசதம்; அயர்லாந்துக்கு 164 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 163 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 163 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்தது.
குசல் மெண்டிஸ் அரைசதம்; 164 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 43 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் அதிரடியாக 44 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். பதும் நிசங்கா 24 ரன்களும், கமில் மிஷாரா 14 ரன்களும் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கார்த்தி, ஜார்ஜ் டாக்ரெல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மார்க் அடாய்ர் மற்றும் கேரத் டெலானி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்குகிறது.