அரைசதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் படம் | AP
கிரிக்கெட்

முதல் ஒருநாள்: குசல் மெண்டிஸ் அரைசதம்; இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (ஜனவரி 22) தொடங்கியது.

கொழும்புவில் இன்று நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

குசல் மெண்டிஸ் அரைசதம்; 272 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 117 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜனித் லியாநாகே 46 ரன்களும், கமில் மிஷாரா 27 ரன்களும் எடுத்தனர். துனித் வெல்லாலகே 12 பந்துகளில் அதிரடியாக 25 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாம் கரண், லியம் டாஸன் மற்றும் ரிஹான் அஹமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

In the first One Day International against England, the Sri Lankan team, batting first, scored 271 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போர் முடிவுக்கு புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

மூடப்படாத ரயில்வே கேட்! லாரி மீது ரயில் மோதி விபத்து! நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்ப்பு!

சிறை முதல் ரெட்ட தலை வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

"உதயநிதி மீது FIR போடணும்! திமுக ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா?": அண்ணாமலை பேட்டி | BJP | DMK

2025 - 2026 ஜனவரியில் தங்கம், வெள்ளி விலை இவ்வளவு உயர்வா? போட்டியில் சிக்கனும் முட்டையும்கூட..

SCROLL FOR NEXT