டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்கா 199 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று (பிப்ரவரி 15) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் போட்டியில் அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இருவர் அரைசதம் விளாசல்; நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மோனங்க் படேல் மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அரைசதம் விளாசி அசத்தினர். சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிகபட்சமாக 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
கேப்டன் மோனங்க் படேல் 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மிலிண்ட் குமார் 28 ரன்களும், ஷாயன் ஜஹாங்கீர் 22 ரன்களும் எடுத்தனர்.
நமீபியா தரப்பில் கேப்டன் எராஸ்மஸ் மற்றும் வில்லெம் மைபர்க் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.