சாய்தேஜா அரைசதம் விளாசல்; நெதர்லாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்கா 196 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்கா 196 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்று வரும் போட்டியில் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அமெரிக்கா முதலில் விளையாடியது.
சாய்தேஜா அரைசதம்; நெதர்லாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சாய்தேஜா அதிகபட்சமாக அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷுபம் ரஞ்சனே 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் மோனங்க் படேல் 36 ரன்களும், ஷாயன் ஜஹாங்கீர் 20 ரன்களும் எடுத்தனர்.
நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லோகன் வான் பீக், கைல் கிளைன் மற்றும் ஃபிரெட் கிளாசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.