முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹரியாணா தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கேஜரிவால்!

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஹரியாணா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:41 PM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

ஜாமீனில் வெளியே வந்த தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஹரியாணா பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரசாரம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை ஹரியாணாவில் உள்ள யமுனாநகரின் ஜகாத்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப் பேரணி மூலம் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் 90 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், 11 மாவட்டங்களில் 13 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.

விஜய் கட்சி மாநாடு அக். 27-ல் நடைபெறுமா?  4 நாள்களில் தீபாவளி!

இந்த நிலையில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனது பதவியை ராஜிநாமா செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால். பதவி விலகிய பின்னர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டுள்ள முதல் தேர்தல் பிரசாரம் இதுவாகும்.

அரவிந்த் கேஜரிவால் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், “பாஜகவினர் என்னை சிறைக்கு அனுப்பினார்கள். இப்போது ஹரியாணாவில் இருந்து அவர்களை ஹரியாணா மக்கள் வெளியே அனுப்புவார். முழு ஹரியாணாவும் மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கிறது. மக்கள் அவர்களை எந்த தெருவிலும், எந்த கிராமத்திலும் பாஜகவினரை நுழைய விடுவதில்லை என்பது எனக்கு தெரியும். மக்கள் ஆளும் கட்சி மீது எரிச்சலடைந்துள்ளனர்.

நான் சிறையில் இருந்தபோது ஆம் ஆத்மியின் எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயன்றனர். தில்லி அல்லது பஞ்சாப்பில் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றார்கள். எங்களுடையது மிகவும் நேர்மையான கட்சி.

முதல் டெஸ்ட்: 308 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

நான் சிறையில் இருந்து திரும்பினேன். நான் அக்னி பரிட்சையை எதிர்கொள்ள இருக்கிறேன். ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று வந்த பிறகு சீதாதேவி ஒரு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். அதுபோல நானும் ஒரு சோதனையை எதிர்கொண்டுள்ளேன்.

மக்கள் கேஜரிவால் நேர்மையற்றவன் என என்னை நினைத்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம். நான் நேர்மையானவன் என நினைத்தால் மட்டும் எனக்கு வாக்களிக்கட்டும்.

மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே நான் தில்லி முதல்வராக திரும்பிவருவேன். நான் நினைத்திருந்தால் முதல்வராக இருந்திருக்க முடியும். ஆனால், நான் அப்படி செய்யவில்லை. மக்கள் என்னைத் தேர்ந்தெடுக்கட்டும். எனக்கு இருக்கும் தைரியம் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன்” என்றார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்? - தமிழக அரசு விளக்கம்!

தப்வாலி, ரானியா, பிவானி, மெஹம், புந்த்ரி, ரேவாரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் அரவிந்த் கேஜரிவாலின் பிரசாரம் நடைபெறுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர். சந்தீப் பதக், ஆளும் பாஜகவை விமர்சித்து பேசுகையில், “தவறான நிர்வாகம், வேலையின்மை ஆகியவை ஹரியாணாவில் அதிகரித்துள்ளது. இதுவே ஆளும் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும்” என்றார்.

பேரவைத் தேர்தல்

கடந்த வாரம் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த கேஜரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஆம் ஆத்மி அனைத்து இடங்களிலும் சுயேச்சையாக போட்டியிடுகிறது.

எலானுக்கு 5 ஆண்டுகள் சிறையா? ஏன்?

முழு கட்டுரையைப் படிக்க →