இனியா தொடர் 
தற்போதைய செய்திகள்

நிறைவடைகிறது இனியா தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆல்யா மானசா நடித்துவரும் இனியா தொடர் நிறைவடைகிறது.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலத் தொடரான இனியா, விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் செம்பா பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த ஆல்யா, பின்னர் இத்தொடரில் இருந்து விலகினார்.

தற்போது, ஆல்யா மானசா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும், இத்தொடரில் ரிஷி, ஸ்ரவன் ராஜேஷ், தீப்தி கபில், பிரவீணா, ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடர் வாரத்தின் ஏழு நாளும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

பரந்த மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கைக் கொண்ட நாயகி(இனியா), ஆணாதிக்கம் கொண்ட போலீஸ் அதிகாரியான நாயகனை(விக்ரம்), திருமணம் செய்துகொண்டு, நாயகனுக்கு பாடம் கற்பிக்க முயற்சிக்கிறார். இதுவே இத்தொடரின் மையக்கரு.

இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இனியா தொடர் நிறைவடையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT