சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு திடீரென ரூ.480 உயா்ந்து ரூ.55,080-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,825-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.6,885-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 உயா்ந்து ரூ.97.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,500 உயா்ந்து ரூ.97,500-க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் வரலாற்றில் முதல்முதலாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55,000-ஐ கடந்தது.
மத்திய நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைத்ததை தொடர்ந்து, தங்கத்தின் விலை ரூ. 3,000 வரை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி,ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்துக்கு சென்றுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.