பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. 
தற்போதைய செய்திகள்

பிக் பாஸ் - 8 தொடங்கும் தேதி அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அக்.6-ல் தொடங்குகிறது.

DIN

பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் பார்க்கின்றனர். கடந்த 7 சீசன்களாக இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது.

சில நாள்களுக்கு முன்பு, இதுவரை எந்த சீசன்களில் இல்லாத வகையில் பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சியை(ப்ரோமோ) மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் வெளிஉலக தொடர்பு இல்லாமல் 100 நாள்களுக்கு உள்ளே தங்கியிருந்து, அவர்களின் தனிப்பட்ட குணங்களை வெளிப்படுத்துவதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்.

இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் இணையத்திலும் பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பிரபலமான நடிகர் அருண், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும், பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சியின் அக்டோபர் 6 ஆம் தேதியே அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

SCROLL FOR NEXT