துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதியநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பழனிவேல் தியாகராஜன் 
தற்போதைய செய்திகள்

பதவியேற்பு விழாவில் பங்கேற்காத அமைச்சர்கள் யார்?

புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சா்கள் பழனிவேல் தியாகராஜன், அமைச்சா் சிவசங்கரன் பங்கேற்கவில்லை.

DIN

சென்னை: புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சா்கள் பழனிவேல் தியாகராஜன், அமைச்சா் சிவசங்கரன் பங்கேற்கவில்லை.

தாயாருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மதுரை சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விமானம் கால தாமதம் ஆனதால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

அதேபோன்று அமைச்சா் சிவசங்கரன் அரசு பயணமாக லண்டன் சென்றுள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை ன கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதியநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்ததாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திராவிட இயக்க கொள்கைவழி நின்று, தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் வகையில், துணை முதல்வராக பொறுப்பேற்கும், கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

பல்வேறு இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இணையும் அன்புச் சகோதரர் வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், புதியதாய் அமைச்சரவையில் பொறுப்பேற்கும் கோவி செழியன், ராஜேந்திரனுக்கு எனது அன்பும் - வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT