ட்ரோன் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

சென்னையில் 6 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

சென்னையில் அக். 1-ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை.

DIN

இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகசக் கண்காட்சி நடைபெறவுள்ளதால், அக். 1-ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விமானப்படை தின அணிவகுப்பு - 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.

இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.

எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரைப் பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருள்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூா்யகிரண் குழு, வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டா் அணி ஆகிய சாகசங்கள் நிகழ்த்தப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

காலிறுதியில் நிகாத் ஜரீன்

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

SCROLL FOR NEXT