கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ரூ.14 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பெண் நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மண்டலா மாவட்டத்தில் பிச்சியா காவல் நிலையத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் மற்றும் ஹாக் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இன்று (ஏப்.2) காலை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.14 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவின் மூலம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் படி மாநிலத்திலுள்ள நக்சல்களை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 10 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையின்கீழ் இந்தியாவில் நல்ல மாற்றங்கள்: தென் கொரிய அமைச்சர்

SCROLL FOR NEXT