தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டிருந்ததால் பரபரப்பு 
தற்போதைய செய்திகள்

அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளின் போது அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைந்து மாலை போல போட்டுள்ளனர்.

இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அண்ணா சிலை அருகே உள்ள அண்ணா நுாற்றாண்டு மண்டபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெறும் திமுக மகளிர் அணி, முகவர்கள், தொண்டர் அணி பயிற்சி பட்டறை கூட்டத்திற்கு வந்த திமுகவினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு வந்த போலீசார், அண்ணா சிலை மீது இருந்த கொடியை அகற்றினர். பின்னர், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு கூட்டத்திற்கு சென்றனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை இணைத்து மாலை போன்று அண்ணா சிலையில் மீது அணிவித்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் நிறுவன காவலருக்கு மிரட்டல்: சிறாா் உள்ளிட்ட 3 போ் கைது

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

SCROLL FOR NEXT