கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

இலங்கை: ஊழல் தடுப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய ஊழல் தடுப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊழலை தடுக்கும் விதாமக கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்பு குற்றவியல் மசோதாவை, இன்று (ஏப்.8) ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து ஒருமனதாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளனர்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்யும்போது அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா கூறுகையில், இதற்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற ஊழல்களினால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது இயற்றப்படும் இந்தச் சட்டத்தின் மூலம் அந்நாடு ஊழலிலிருந்து விடுவிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இத்துடன், இந்த புதிய சட்டத்தின் மூலம் இதற்கு முந்தைய அரசுகளின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுக்களும் முறையாக விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின் மூலம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களைத் தேடி கண்டுபிடிப்பது, அவர்களது சொத்துக்களை முடக்குவது போன்ற அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆளும் அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தப் புதிய சட்டத்திற்கு தேவையான அடிப்படை வேலைகளை தங்களது ஆட்சியிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், அரசு இந்தச் சட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி பழிவாங்கும் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, இதற்கு முந்தைய அரசுகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3-க்கும் மேற்பட்டோர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

பள்ளிகளில் மழை நீா் தேங்கும் பிரச்னைகள் தீா்க்கப்படும்: ஆஷிஷ் சூட்

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT