ஸ்லோவாக்கியா அதிபருடன் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 
தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கியா அளித்த பரிசு!

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கிய அளித்த பரிசைப் பற்றி...

DIN

ஸ்லோவாக்கியா சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவருக்கு இந்திய தத்துவங்களின் ஸ்லோவாக்கிய மொழிபெயர்ப்பை அந்நாட்டு அதிபர் பரிசளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். போர்ச்சுகலைத் தொடர்ந்து இன்று (ஏப்.9) ஸ்லோவாக்கியா சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லேக்ரினியைச் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது பழம்பெரும் இந்திய தத்துவ இலக்கியங்களின் ஸ்லோவாக்கிய மொழிபெயர்ப்பு அடங்கிய புத்தகத்தை அதிபர் பெல்லேக்ரினி குடியரசுத் தலைவருக்கு பரிசளித்தார். இந்தக் குறிப்புகள் அனைத்தும் இலக்கியவாதியான ராபர்ட் கார்ஃபிக் என்பவர் சுமார் 5 ஆண்டுகளாக உழைத்து சமஸ்கிரத்திலிருந்து ஸ்லோவாக்கிய மொழிக்கு மொழிப்பெயர்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்தும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய தத்துவங்களின் ஸ்லோவாக்கிய மொழிப்பெயர்ப்பு குறித்து தனது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது ஊக்கமளிக்கும் முயற்சியெனவும் இதன் மூலம் நமது கலாசாரம் போற்றி பரப்பப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க:மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT