கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய்! சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் புதிய நோய் பரவலினால் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அந்நாட்டு அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவக்கும் கடந்த மார்ச்.30 முதல் ஏப்.4 வரையிலான காலக்கட்டத்தில் இந்நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொற்று பரவியதற்கான மூலக்காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, லெகியோனையர்ஸ் என்பது லெகியோனெல்லா எனும் நன்னீரில் வாழும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு வகையான நிமோனியா காய்ச்சலாகும். இந்த பாக்டீரியாக்கல் மனித உடம்பினுள் சென்ற 2 - 10 நாள்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்ட துவங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காற்றில் பரவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5-10 சதவிகிதம் உயிரிழக்கும் அபாயமுள்ளதெனவும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்றால் 80 சதவிகிதம் வரையில் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு: உறுதி செய்தது லண்டன் உயா்நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! யார் செலவு?

"திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!" Rahul Gandhi-யின் பரபரப்புக் குற்றச்சாட்டு!

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT