ஆன்லைன்  கோப்புப்படம்.
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரம்: ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த ஆசிரியை

மகாராஷ்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுனிதா சௌத்ரி(54). இவரிடம் சமூக ஊடகங்கள் மூலம் நட்பான நபர், வலைத்தளம் ஒன்றில் முதலீடு செய்தால் அதிக வருமான ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய ஆசிரியை சுனிதா சுமார் 50 நாள்களில் அதில் ரூ.66 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.

பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் முதலீட்டையும் அதனுடைய லாபத்தையும் அந்த நபரிடம் ஆசிரியை கேட்டுள்ளார்.

இபிஎஸ் இல்லத்தில் அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து!

ஆசிரியை சுனிதா பணம் கேட்கத் தொடங்கியதும் அந்த நபர் இரண்டு மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். இதுதொடர்பாக ஆசிரியை கோல்சேவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து மோசடி நபரின் ஐபி முகவரி, மொபைல் இருப்பிடங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தடயங்களைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் எடை குறைய...

புள்ளிகள்

புதிய நிலா!

வீட்டுக் குறிப்புகள்...

மிகச் சிறிய ரயில் நிலையம்

SCROLL FOR NEXT