தற்போதைய செய்திகள்

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: ரூ.1.09 கோடி பறிமுதல்

கோவையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.

DIN

கோவை: கோவையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலரது நடவடிக்கைகள் இருப்பதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார், அங்கு இருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்ட போது மடிக்கணிகள், செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அங்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

பின்னர், அந்த அறையில் இருந்த 7 இளைஞர்களையும் கைது செய்து காட்டூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜடேந்திரா, விபின் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் பணம், 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT