மாலத்தீவு அதிபர் முஹம்மது மூயிஸ் 
தற்போதைய செய்திகள்

மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!

மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

மாலத்தீவு நாட்டில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நாடான மாலத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலத்தீவின் குடிவரவுச் சட்டத்தில் மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அதன்மூலம் இந்தத் தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாலத்தீவு அதிபரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிவரவுச் சட்டத்தின் மூன்றாவது திருத்தத்திற்கு அதிபர் முஹம்மது மூயிஸ் ஒப்புதலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் மாலத்தீவின் எல்லைக்குள் நுழைய முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

மாலத்தீவு அரசின் இந்த உத்தரவானது காஸா மீதான இஸ்ரேலின் போரில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் முறையாக வழங்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு மாலத்தீவின் கொள்கை ரீதியான ஆதரவை அதிபர் மூயிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:சீனாவில் காட்டுத் தீ: 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: அக்.16 முதல் 20,378 பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

வள்ளலாா் அவதார தினம்: ஏழைகளுக்கு நல உதவிகள் அளிப்பு

தடுப்புக் காவலில் ரௌடி கைது

மெரீனா கடற்கரையில் எண்ணெய் கசிவு தடுப்பு ஒத்திகை

SCROLL FOR NEXT