தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.4 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

DIN

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் கிஷ்த்வாரில் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது அட்சரேகை 33.18 மற்றும் தீர்க்கரேகை 75.89 இல் பூமிக்கு 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதங்ககள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்று தேசிய நில அதிர்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், புதன்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் முறையே 5.9 மற்றும் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

பருவகால வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பூகம்பங்கள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கு ஆப்கானிஸ்தான் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக உள்ளது என ஐ.நா சபையின் மனிதநேய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அடிக்கடி ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன, அவை ஏற்கனவே பல தசாப்த கால மோதல்கள் மற்றும் வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT