கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

DIN

சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஸ்தர் காவல் துறை தலைவா் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், கொண்டகான்-நாராயண்பூர் இடையேயான எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை காலை நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது 2 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஏகே-47 துப்பாக்கி மற்றும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 359 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT