gold price 
தற்போதைய செய்திகள்

புதிய உச்சமாக ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் வியாழக்கிழமை(ஏப்.17 தடாலடியாக பவுனுக்கு ரூ.840 உயர்ந்து புதிய உச்சமாக ரூ.71,360-க்கு விற்பனையாகி வருகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், வரலாறு காணாத புதிய உச்சமாக வியாழக்கிழமை(ஏப்.17) பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த வாரம் புதன்கிழமை(ஏப்.9) தடாலடியாக சவரனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ.67.280-க்கும், வியாழக்கிழமை ரூ. 1,200 உயர்ந்து ரூ.68,480-க்கும், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960-க்கும், சனிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.70,160 ஆக புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், இந்த வாரம் திங்கள்கிழமை( ஏப்.14) சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040-க்கும், செவ்வாய்க்கிழமை( ஏப்.15) சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,720-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை( ஏப்.16) தடாலடியாக பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520 -க்கும், கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ. 8,815-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், நாளுக்கு நாள் தடாலடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக வரலாறு காணாத புதிய உச்சமாக வியாழக்கிழமை(ஏப்.17) பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும், கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ரூ. 8,920-க்கும் விற்பனையாகி வருகிறது.

இரண்டு வாரங்களில் பவுனுக்கு ரூ.5,965 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குவதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காகவும், சேமிப்பிற்காக தங்கம் வாங்கும் எளிய மக்கள் அதிர்ச்சியடைள்ளனர்.

வெள்ளி நேற்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT