தற்போதைய செய்திகள்

துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன்: மல்லை சத்யா

துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் செயலா் மல்லை சத்யா உறுதியளித்தார்.

DIN

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் செயலா் மல்லை சத்யா உறுதியளித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தாயகம் அலுவகத்தில் மதிமுக குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் துணை பொதுச்செயலாளர் பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிா்வாகக் குழு கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்கு பின்பு துரை வைகோ தமது முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தாா்.

இதுதொடர்பாக மல்லை சத்யா பேசியதாவது:

என்னுடைய நடவடிக்கை மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேரும் நிலை ஏற்பட்டதற்கு அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்ற சூழள் இனி எதிர்காலத்தில் நிகழாது என உறுதியளித்தேன். எனது மன்னிப்பை ஏற்று தனது பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என அறிவித்துள்ள துரை வைகோவுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். துரை வைகோவுடன் இணைந்து கட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். துரை வைகோவுக்கு அரணாக இருப்போன் என உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT