எம்-சாண்டு மணல் 
தற்போதைய செய்திகள்

எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு

எம்-சாண்டு மணல், ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்படட விலையிலிருந்து ரூ.1000- குறைத்து விற்பனை செய்திட தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மணல் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயா்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிா்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் துறைசாா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கடந்த 25-ஆம் தேதி கல்குவாரி, கிரஷா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னா் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, எம்-சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு உயா்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன்னுக்கு ரூ.33 என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கான அரசாணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.

இந்த கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே. பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் எ. சரவணவேல்ராஜ், கல்குவாரி, கிரஷா் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.சின்னசாமி, சங்க உறுப்பினா்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குநா்கள் மற்றும் துணை இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT