அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,78,860 பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுதந்திர நாள் விடுமுறை மற்றும் வாரவிடுமுறை முன்னிட்டு,சென்னை மற்றும் பிற பகுதிகளில் உள்ல மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, வியாழக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மூலம் சுமார் 1,78,860 பயணிகள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர்.
கடந்த 13 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை 5,780 பேருந்துகளில் 3,13,900 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.