செங்குன்றம் பாலவாயில் குமரன் நகர் பகுதியில் வீட்டில் மழை நீர் புகுந்ததால் வெளியில் வரமுடியாமல் அவதிக்குள்ளான 4 பேரை புதன்கிழமை பேரிடர் குழுவினர் மீட்டனர்.
‘டிட்வா’ புயல் காரணமாக தொடா்ந்து இடைவிடாமல் பெய்து வரும் மழையால், சென்னை செங்குன்றம் அடுத்த நியூ சன் கார்டன் இரண்டாவது பிரதான சாலை பாலவாயில் பகுதியில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் வீட்டில் இருந்து வெளியில் வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் இருந்த பச்சையப்பன், செல்வராஜ், லட்சுமி, மோனிஷ் ஆகிய நான்கு பேரையும் பத்திரமாக மீட்டு நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.
அதேபோன்று குமரன் நகர் மூன்றாவது பிரதான சாலையில் இருந்த நந்தகுமார், முத்துக்குமரன், மணிகண்டன், லட்சுமிபதி, காலைவாணன் ஆகிய ஐந்து பேரையும் செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்
மேலும், பேரிடர் மீட்புப் படையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.