சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் வளையம் மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். அதிமுகவினர் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து மரியாதை செலுத்தினர்.
6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.