தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாநகரப் பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் முரளிபாலுசாமி மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.
சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட எருமப்பட்டி ஒன்றியம் மற்றும் நாமக்கல் தொகுதிக்குள்பட்ட புதுச்சத்திரம் ஒன்றியத்தில் மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், எம்ஜிஆா் மன்றத் தலைவா் மின்னாம்பள்ளி கே.நடேசன், ஒன்றியச் செயலாளா் என்.பிரபாகரன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியினா் பங்கேற்றனா்.
சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், நாச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில், சேந்தமங்கலம் தொகுதி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.