நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா  
தற்போதைய செய்திகள்

தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

"மக்களால் நான்; மக்களுக்காக நான்" என்ற குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதா. அவரது 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(டிச.5) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில்,

அதிமுக தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம் ஜெயலலிதா,

"மக்களால் நான்; மக்களுக்காக நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த ஒப்பற்ற தலைவி.

நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை.

இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.

இதயதெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை, அவர்தம் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை அதிமுக தலைமையில் 2026 பேரவைத் தேர்தலில் வாயிலாக நிறுவி, ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, அவர்களுக்கு நாம் செலுக்கும் உண்மையான புகழஞ்சலி! என கூறியுள்ளார்.

Jayalalithaa was an unparalleled personality Edappadi Palaniswami pays tribute

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத 23 ஆயிரத்து 682 பேருக்கு அபராதம்

பழனி பாதயாத்திரை பக்தா்களின் பைகளில் ஒளிரும் வில்லைகளை

இளைஞா் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்

தோ்தலில் போட்டியிட காங்கிரஸில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்! - அகில இந்திய மகளிா் காங். தலைவி

மண்சோறு சாப்பிட்ட பெண் பக்தா்கள்

SCROLL FOR NEXT