முகப்பு
தமிழ்நாடு

எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை: ஓ. பன்னீர்செல்வம்

எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை என்று ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

Updated On : 7 மார்ச், 2026 at 7:03 PM
ஓ. பன்னீர்செல்வம் - ஸ்டாலின் - File photo
பகிர்:

மதுரை: எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை என்று திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அரசியல் திடீர் திருப்பமாக, முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவருமான ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரையில் இன்று நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை. எட்டுத் தோல்வியல்ல, பத்து தோல்வியல்ல, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் தோல்வியைத் தான் சந்திக்கப் போகிறார்கள்.

அண்ணாவின் திமுகவாக இப்போது இல்லை. இது தற்போது அபகரிப்புத் திமுகவாக மாறிவிட்டது. இனிமேலும் அதில் பயணிப்பது தன்மானத்துக்கு எதிரானது என்பதை உணர்ந்துதான், 75 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்தத்தை காத்து வரும் திமுகவில் ஒரு தொண்டனாகத்தான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். தாய் கழகத்தில் இணைந்ததை பெரு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் வெற்றியின் வேந்தர் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்றும் அவரை நாடே பாராட்டி வருகிறது என்றம் ஓ. பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.