'சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் 2025' விருது பெற்றுள்ள தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் பாராட்டு  
தற்போதைய செய்திகள்

சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஐ.நா. சபையின் உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் 2025' விருது பெற்றுள்ள தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் பாராட்டு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஐ.நா. சபையின் உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் 2025' விருது பெற்றுள்ள தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,

சுப்ரியா சாகுவுக்கு விருது கிடைத்திருப்பதால் தமிழ்நாடு பெருமை கொள்கிறது!

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐ.நா. சபையின் உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் 2025' விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு எனது வாழ்த்துகள்... பாராட்டுகள்!

ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

CM stalin Social Media Msg Tmt.Supriya Sahu IAS-UNEP-Champions of the Earth Award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயர வேண்டும் உயா் கல்வி

காப்பகத்திலிருந்து தப்பிச் சென்ற 3 சிறுமிகள் மீட்பு: இருவா் கைது

தெரு நாய்களுக்குப் பொருத்துவதற்கான மைக்ரோ சிப் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்கால தடை

மின்வாரியத்துக்கு தனியாா் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ரூ. 350 கோடியை 3 மாதங்களில் செலுத்த நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் மோடி நாளை மறுநாள் வெளிநாட்டுப் பயணம்

SCROLL FOR NEXT