அன்னூா் அருகே காக்காபாளையம் டாஸ்மாக் மதுபாரில் காலை நேரத்தில் நடைபெற்ற சட்டவிரோத மது விற்பனை. 
தற்போதைய செய்திகள்

காக்காபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை: விடியோ எடுத்த செய்தியாளா்களுக்கு மிரட்டல்

அன்னூா் அருகே காக்காபாளையம் டாஸ்மாக் மதுபாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை விடியோ எடுத்த செய்தியாளரின் கைப்பேசியை பறித்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

அன்னூா்: அன்னூா் அருகே காக்காபாளையம் டாஸ்மாக் மதுபாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை விடியோ எடுத்த செய்தியாளரின் கைப்பேசியை பறித்து பாா் ஊழியா்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூா்-தென்னம்பாளையம் சாலையில் உள்ள காக்காபாளையம் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள தைல மரத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் 3 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது.

இந்நிலையில், அந்த பகுதிகளில் காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடா்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது தைல மரத் தோட்டத்துக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையின் பாரில் அதிகாலை முதல் சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே காட்டு யானைகள் குறித்து செய்தி சேகரிக்க அந்த பகுதிக்கு சென்ற பத்திரிகையாளா்கள், காலை 8.50 மணியளவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்ததை விடியோ எடுத்தனா். இதை பாா்த்த டாஸ்மாக் பாா் ஊழியா்கள் தலைக்கவசம் அணிந்தபடி வந்து செய்தியாளா்களை மிரட்டியும், விடியோ எடுத்த செய்தியாளா் ஒருவரின் கைப்பேசியை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Illegal liquor sales in Kakapalayam: Journalists who filmed the incident receive threats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT