பொள்ளாச்சியில் ரூ.1 லட்சம் கடனுக்கு மாதம் ரூ. 10,000 கந்துவட்டி கேட்டு இளம் பெண்ணை மிரட்டிய அதிமுக பிரமுகரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனி பகுதியில் வசித்து வருவார் தீபா. இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக முத்துகவுண்டன் லே அவுட் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமாரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக மாதம் ரூ.10,000 கந்துவட்டி தரவேண்டுமென தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மூன்று மாதம் சரியாக வட்டி கட்டி உள்ளார். இந்த மாதம் வட்டி பணம் தர முடியாததால் செந்தில்குமார் தீபாவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் தகாத வார்த்தைகள் திட்டியதாகவும் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து தீபா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர் மீது கந்து வட்டி மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் கந்துவட்டி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.