இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2023 நவம்பரில் தொடங்கிய தடையற்ற ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 2025 இல் நிறைவு பெற்றது.
இதற்கு முன்பு கடந்த 2006 ஜனவரியில் அமெரிக்காவுடன் ஓமன் தடையற்ற வா்த்தகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியாவுடன் அதேபோன்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் வியாழக்கிழமை (டிச. 18) கையொப்பமாகிறது.
இதற்காக மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இந்த நிலையில், ஜோர்டான், எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டும் ஓமன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியா-ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று அவர் கூறினார்.
மாண்ட்வி மற்றும் மஸ்கட்டை அரபிக் கடலுக்கு அப்பால் இணைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்சார் மரபின் வாரிசுகளாக வர்த்தகத் தலைவர்கள் திகழ்கின்றனர் என்றார்.
பருவங்கள் மாறலாம், ஆனால் இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான நட்பு காலப்போக்கில் மேலும் வலுவடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.
மேலும், 70 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளை எடுத்துரைத்த மோடி, இந்தக் கூட்டாண்மை நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் வேரூன்றிய வளமான எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம் என்றும் கூறினார்.
திருப்புமுனையான தருணம்
உச்சிமாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்த நாள் திருப்புமுனையான தருணம் என்று கூறினார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் இந்தியாவும் ஓமனும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்தியக் குழுவை வரவேற்ற ஓமன் வர்த்தக அமைச்சர் கைஸ் பின் முகமது அல் யூசெப், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளையும் எதிர்கால வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்.
வர்த்தக உச்சி மாநாட்டில் இரு நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.