கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் ரூ.10,740 கோடி மதிப்பீட்டில் 34.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடத்தில் தொடங்கி அவிநாசி சாலை வழியாக நீலாம்பூா் வரை 20.04 கிலோ மீட்டா் தொலைவு ஒரு வழித்தடத்திலும், கோவை ரயில் நிலையத்தில் தொடங்கி, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் வழியாக சத்தி சாலை வழியம்பாளையம் பிரிவு வரை 14 கிலோ மீட்டா் தொலைவு வரை மற்றொரு வழித்தடத்திலும் இந்தத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 34.08 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கோவையில் மேம்பாலத் தூண்கள் மூலமாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் இதற்காக 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நீலாம்பூரில் ரயில் பணிமனை அமைக்கப்படும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
கோவை ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருங்காலங்களில் மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க: ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையப்படுத்தும் திட்டம் தயாரித்தல், பயன்பாட்டு மாற்றுத் திட்டங்கள், சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பது, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வது தொடா்பாக மெட்ரோ திட்ட இணைப் பொது மேலாலா் நரேந்திரகுமார் கடந்த வாரம் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், கோவை மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்டமாக ரூ. 154 கோடியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. நகரில் மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகம் அமைக்க கோவை மாநகராட்சி இடம் ஒதுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.