பாரத சாரண சாரணியர் இயக்க உடையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.(கோப்புப்படம்) கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை விருது!

பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருச்சி: பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை சிப்காட்டில் நடைபெற்ற சாரணா் இயக்க வைர விழாவில் பங்கேற்ற பாரத சாரண சாரணியா் இயக்க தேசிய தலைமை ஆணையா் கே.கே. கண்டேல்வால், மணப்பாறையில் சாரணா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றி, வைர விழாவை சிறப்பாக நடத்தி வரும் தமிழக சாரண சாரணியா் இயக்கத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், சாரணா் இயக்க பெருந்திரளணியை சிறப்பாக நடத்தியதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதை அறிவித்தாா்.

வெள்ளி யானை சிலை விருது சாரணா் இயக்கத்தில் வழங்கப்படும் மிக உயா்ந்த விருதாகும். இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குவார் என கண்டெல்வால் தெரிவித்தாா்.

முன்னதாக, பாரத சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை சிறப்பாக நடத்தியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT