முதல்வர் மு.க. ஸ்டாலின்  
தற்போதைய செய்திகள்

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவு.

DIN

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இன்று(பிப். 3) நடைபெற்றது. பேரணிக்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:

“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”

தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!

நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT