கார் வெடி குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 
தற்போதைய செய்திகள்

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் வெடி குண்டு வெடித்ததில் 14 பெண்கள் மற்றும் 1 ஆண் பலியாகினர். மேலும்,15 பெண்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

இருப்பினும், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்கானிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

இதையும் படிக்க: 2025 கிராமி விருதுகள்: இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி!

முன்னதாக, கடந்த பிப்.1 அன்று மனிபிஜ் நகரத்தில் நிகழ்த்தப்பட்ட இதேப்போன்ற ஒரு கார் வெடி குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் படுகாயமடைந்தனர்.

துருக்கியின் ஆதாரவில் இயங்கி வரும் சிரிய தேசிய இராணுவப் பிரிவுகள் மற்றும் அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் அந்நாட்டின் உள்நாட்டுப் போர் முடிவுப் பெற்ற பின்னரும் தொடர்வதினால் மன்பிஜ் நகரத்தில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

பத்தாவது நாளை எட்டியது ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்! இன்று முடிவு எட்டப்பட வாய்ப்பு?

எஸ்.ஐ.ஆா். படிவத்தை பூா்த்தி செய்து வழங்க மறுத்து போராட்டம்

மெத்தம்பெட்டமைன் விற்பனை: நால்வா் கைது

வன்னியா் உள் ஒதுக்கீடு கோரி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

SCROLL FOR NEXT