குஜராத்: பாஜக எம்.எல்.ஏ. காலமானார்!
குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் காலமானதைப் பற்றி...
குஜராத் மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உடல் நலக்குறைவால் காலமானார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் காடி சட்டமன்ற உறுப்பினரான கர்ஷன்பாய் சோலன்கீ (வயது 68), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அஹமதாபாத்திலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.4) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது இறுதி சடங்கு காடி தாலுக்காவிலுள்ள அவரது சொந்த ஊரான நாகராஸன் கிராமத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
இதையும் படிக்க: ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இதனைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கர்ஷன்பாய் சோலன்கீ காடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2017 மற்றும் 2022 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.