சாலையில் கொட்டிய மீன்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற அந்த பகுதி மக்கள்.  
தற்போதைய செய்திகள்

மீன் வேன் டயர் வெடித்து விபத்து: சாலையில் கொட்டிய மீனை போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!

மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்கள்ளானதில் சாலையில் கொட்டிய மீன்களை அந்த பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.

DIN

வேலூர்: அகரம் சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்கள்ளானதில் சாலையில் கொட்டிய மீன்களை அந்த பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன்(28). இவர் விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, வேன் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வேன் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் இருந்த மீன்கள் சாலையில் கொட்டியது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மற்றும் வாகந ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொது மக்களை அப்புறப்படுத்தினர்.

வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT